Friday, November 19, 2010

ஜாதியை ஒழிக்க விரும்புவோர் ஜாதி மறுப்புத் திருமணம் செய்யவேண்டும்!


    ஜாதியை ஒழிக்க விரும்புவோர் ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய வேண்டுமென இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன் பேசினார்.நாளை விடியும் சிற்றிதழின் 10 ஆண்டு பணிகள் - ஓர் மீள் பார்வை நிகழ்ச்சி அய்க்கப் அரங்கில் நடைபெற்றது. அப் போது பேசிய சி.மகேந்திரன்,

"
அரசியல் இலக்கியப் பின்புலம் இல்லாமல் ஒரு இதழை நடத்து வது பெரும் சிரமம். ஆனால் இவ்விதழை தனி மனிதராக 10 ஆண்டுகள் நடத்தி வருவது சாதனைதான். தமிழ்ச் சமூகம் குறித்து எல்லோரும் கவலைப் படுகிறார்கள். ஆனால் உழைப்பு குறைவாக இருக்கிறது. பலரும் இயங்கிக் கொண்டே, இருக்கும் போதுதான், ஒரு சமூகம் விழிப்பு ணர்வுடன் இருக்கும்.

இந்தி எனும் ஒரு மொழியே கிடையாது. வட இந்தியாவின் பல்வேறு மொழிகளையும் சிதைத்து உருவான மொழி தான் இந்தி. சமஸ்கிருதத்தை எதிர்த்து சமரசம் செய்து கொள்ளாமல் நிமிர்ந்து நிற்கிற ஒரே மொழி தமிழ்தான்! மொழி குறித்து சில பொது வுடமைக்காரர்கள் கூட தவறாக எண்ணுகின்றனர். பொருளா தார வளர்ச்சிக்கு உழைப்பு எவ்வளவு முக்கியமோ, அது போல சமுதாய மேம்பாட்டிற்கு மொழி முக்கியம்.
தமிழர்களின் பண்டைக் கால அறிவு, ஆற்றல்கள் மிகவும் அற்புதமானவை. இன்றைக்கு இடையில் வந்த ஜாதியால் தமிழன் பிளவுபட்டு நிற்கின் றான். ஜாதி மறுப்புத் திருமணங் கள் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் ஜாதி ஒழியும். நான் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவன்.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்த தோழர்கள் தொடர்ந்து போராடத் தயங்குகின்றனர். அவர்களுக்கு ஒரு குழந்தை வருகிற போது மீண்டும் அவர்கள் இருவரில் எந்த ஜாதி பலமிக்கதோ அதில் ஒட்டிக் கொள்கிறார்கள். ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்தவர்கள் ஒருங்கிணைய வேண்டும். அவர் களுக்குள் உதவிக் கொள்கிற, உணர்வுகளைப் பாதுகாத்துக் கொள்கிற அமைப்புகள் வேண்டும்.

கருப்பையை வெட்டி எறியாமல் பெண் விடுதலை பெற முடியாது எனத் துணிச்ச லாகச் சொன்ன ஒரே தலைவர் உலகில் பெரியார் மட்டுமே! மொத்தத்தில் மனுதர்மத்தைத் தகர்க்காமல் சமூகம் மேன்மை யுற முடியாது" என சி.மகேந்திரன் பேசினார். 

-"
விடுதலை"-27.2.2008

Wednesday, November 17, 2010

ஜாதி மறுப்புத் திருமணத்தால் மட்டும் ஜாதி ஒழிந்து விடுமா?

    நாங்கள் கூறுவதெல்லாம், உன்னை எந்தக் கடவுள், எந்த மதம், எந்த சாஸ்திரம், எந்த புராணம் இழி ஜாதியாகப் படைத்துக் காட்டி இருக்கிறதோ, அவற்றை வேண்டாம் என்று தள்ளிவிடு; அவை நம்முடையதல்ல என்று வெறுத்துவிடு என்கிறோம். ஒவ்வொருவரும் இதைத்தான் நினைக்க வேண்டும். அதாவது எனக்கும் -ஜாதிக்கும் -மதத்துக்கும் -கடவுளுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை மட்டும் உண்மையாக -இதயப் பூர்வமாக சொன்னால் போதும். ஜாதியை உண்டாக்காத மதம் எத்தனையோ இருக்கின்றன.ஜாதியை உண்டாக்காத கடவுள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றில் ஒன்றை வேண்டுமானால் எடுத்துக் கொள். இல்லாவிட்டால் தைரியசாலியாக இருப்பதானால், ஒன்றும் வேண்டாம் என்று சொல்வது நல்லது.


எனக்கு முன்னால் பேசிய சில தோழர்கள் சொன்னார்கள். ஏதோ கல்யாணம் (கலப்பு மணம்) செய்து கொண்டால் ஜாதி ஒழிந்து போகும் என்று. கலப்பு மணம் செய்வதால் ஜாதி ஒழிந்து போகும் என்று சொல்ல எனக்குத் தைரியமில்லை. அதையும் ஒரு ஜாதியாக ஆக்கிவிடுவார்கள். எப்படி என்றால் கலப்பு மண ஜாதி என்றுதான் கடைசிக்குச் சொல்ல முடியுமே தவிர, ஜாதி அடியோடு போய்த் தொலைய முடியாது. அதுவும் சம ஜாதியில்தான் கலப்பு மணம் நடைபெறும். பறையன், சக்கிலி, பள்ளன் முதலிய ஜாதிகளில் ;மேல்' ஜாதியான் லேசில் மணம் செய்ய மாட்டான்.
நம் நாட்டிலே எத்தனையோ தாசி'கள் இருக்கிறார்கள்; நாமாவது ஒரு கலப்பு மணத்தைச் சொல்லுகிறோம். இவர்கள் ஆயிரம் கலப்பு மணம் செய்து பிள்ளைகள் பெறுகிறார்களே -அந்த ஜாதிக்குள் கூட ஜாதி போவதில்லையே! அதையும் பல ஜாதிகளாக ஆக்குகிறோமே. அவர்களும் மேல்ஜாதி ஆகத்தானே பார்க்கிறார்கள்! இதனால் கலப்பு மணத்தால் ஜாதி போய்விட்டதென்று கூற முடிகிறதா?

இப்போது நானும் தான் கலப்பு மணம் செய்து இருக்கிறேன். தோழர் சாமி சிதம்பரனார், தோழர் குருசாமி, தோழர்கள் எஸ். ராமநாதன் முதலியவர்களும் தான் கலப்பு மணம் செய்து இருக்கிறோம். அதனால் ஜாதி போய்விட்டதா? ஏதோ வசதி இருப்பதால் மக்கள் ஒன்றும் சொல்லாமல் சும்மா இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், எங்களுக்குக் குழந்தைகள் இருந்து அவர்களுக்குக் கலியாணம் ஆக வேண்டுமானால், அப்போது தகராறுதான்.

கலப்பு ஜாதியைச் சேர்ந்தவர்கள்' என்று கூறி கலப்பு ஜாதியார்கள்தாம் ஒருவருக்குள் ஒருவர் திருமணம் செய்து கொள்ளுவார்கள். அன்றியும் எங்களுக்கு மதம், கடவுள், ஜாதி என்ற மூன்றைப் பற்றியும் கவலை இல்லை. அதனால்தான் மறுஜாதி மணம் செய்து கொள்ளவும், அதனால் தைரியமாக இருக்கவும் முடிகிறது. நாட்டில் அரசாங்கம் வந்த பிறகு ஜாதி ஒழிப்புக்கு ஏதாவது சட்டம் செய்யலாம். மத, சாஸ்திரங்களை வைத்துக் கொண்டு ஜாதியை ஒழிப்பது கஷ்டம்.

திருவிழா கொண்டாடுவதும், நல்ல நாள், கெட்ட நாள் -பண்டிகை கொண்டாடுவதும் எதற்காக? மதத்தினால் ஏற்பட்ட ஜாதியை, புராணத்தினால் புகுத்தப்பட்ட ஜாதியை, ஒவ்வொருவர் உள்ளத்திலும் திரும்பத் திரும்ப ஞாபகத்தில் வருவதற்காக தனித்தனியாகப் பிரசங்கம் செய்வதற்குப் பதிலாக, பண்டிகைகள், நல்ல நாள், கெட்ட நாள் மூலம் பிரச்சாரம் செய்யப்படுகிறதே தவிர, அதனால் எந்த விதமான பலனும் இருப்பதாகக் கூற முடியுமா?

மதுரை, ராமேஸ்வரம், பழனி, திருப்பதி ஆகிய இடங்களில் பெரும் பண்டிகைகள் நடக்கின்றது என்றால் அதன் அர்த்தம் என்ன? பத்து வருடத்திற்கு முன் அந்தக் கல்லைக் கழுவிய குடும்பமே இன்னும் கழுவுகிறது. இதுவரை ஒரு மாற்றமும் இல்லை என்றாலும் கூட, அங்கே போய் வருவதன் நோக்கம் என்ன? அங்கே போய் வருவதன் மூலம் மதப் பிரச்சாரம்தான் நடக்கிறதே தவிர வேறு என்ன? எனவே, இந்த மாதிரி சூரசம்ஹாரம், ராமன் பிறப்பு, கிருஷ்ணன் பிறப்பு, பிள்ளையார் சதுர்த்தி, கந்த சஷ்டி அது இது என்று வருகிற அனேக பண்டிகைகள் அனைத்தையும் ஒழிக்க வேண்டும்.

அதோடு பெண்களும் இம்முயற்சியில் முன் வருவார்களானால், கண்டிப்பாக ஜாதி ஒழிந்தே போகும் என்று தைரியமாகக் கூறலாம். ஏனென்றால், ஜாதியைப் பற்றி கெட்ட நம்பிக்கைகள் அவர்களிடம்தான் சீக்கிரத்தில் குடி புகுந்து கொள்கின்றன. எனவே, பெண்கள் அந்த நம்பிக்கைகளை எல்லாம் அடியோடு விட்டுவிட வேண்டும். இந்த மாதிரி நடக்கும் மாநாடுகளுக்கும், பொதுக் கூட்டங்களுக்கும் தாங்கள் வருவதோடு அல்லாமல், தங்கள் புருஷனையும் அழைத்துக் கொண்டு வரவேண்டும். பல தோழர்கள் சொன்ன மாதிரி, கம்யூனிஸ்ட் கட்சியும் திராவிடர் கழகமும் தங்கள் தங்களுடைய வேலை முறைகளை கலந்து வைத்துக் கொண்டு பிரச்சாரம் செய்வது என்று ஆரம்பித்தால், ஒரு வருட காலத்திலே நாம் நினைத்த காரியங்கள் வெற்றி அடைந்து விடும்.

30.1.1952 அன்று திருவொற்றியூரில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் ஆற்றிய  உரை

Wednesday, November 10, 2010

தமிழகத்தில் அதிகரிக்கும் கவுரவக் கொலைகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் கவுரவக் கொலைகள் :7 பேர் உயிர் பறிப்பு

  காதலித்த குற்றத்திற்காக, பாசத்துடன் வளர்த்த மகளை, "குடும்ப கவுரவம்' பாதிக்கும் எனக்கருதி, பெற்றோரே கொலை செய்வது தமிழகத்தில் தொடர் கதையாகி வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 7 பேரது உயிர்களை "கவுரவம்' என்ற பெயரில் பெற்றோர் பறித்துள்ளனர்.


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள திருவண்ணாமலை கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராமன். இவரது மகள் ரஜினிலதா(14). அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரை காதலித்ததாக சந்தேகப்பட்ட சீதாராமன், நேற்று முன் தினம் மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தார்.


இதேபோன்ற சம்பவம் மதுரை எஸ்.எஸ்.காலனியிலும் ஆக.,24ல் நடந்தது. உறவினரை காதலித்ததற்காக மகள் மாரிச்செல்வியை(18) தந்தை ரங்கசாமி, கூலிப்படையுடன் சேர்ந்து விஷஊசி போட்டு கொலை செய்தார்.தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் தொடர்ச்சியாக "கவுரவ' கொலைகள் நடந்துள்ளன.


தர்மபுரி மாவட்டத்தில் வெற்றிவேல்(23) என்பவர், வேறு சமூகத்தைச் சேர்ந்த சுகன்யா(22) என்பவரை காதலித்ததற்காக, ஜூன் 23ல் கொலை செய்யப்பட்டார். சிவகங்கை கே.புதுக்குளத்தில் மகளை காதலித்த சிவக்குமார் என்பவரை தந்தையும், சகோதரரும் ஜூலை 7ல் கொலை செய்தனர்.


திருச்சியில் கார்த்திக் என்பவரை காதலித்த மகள் ஜெயாவை, ஆக.,7ல் கத்தியால் குத்தி தந்தை செல்வராஜ் கொலை செய்தார். இதேநாளில், நெல்லை மாவட்டத்தில் தெய்வராஜ் என்பவரை காதலித்த அருணாதேவி என்பவரை தந்தை வினை தீர்த்தான், "தீர்த்து' கட்டினார்.


கவுரவக்கொலைகள் குறித்து ஆய்வு செய்து வரும் மதுரை "எவிடென்ஸ்' அமைப்பின் நிர்வாக இயக்குனர் கதிர் கூறியதாவது :வடமாநிலங்களில் நடக்கும் கவுரவக் கொலைகள் குறித்து விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. அதேபோல் தமிழகத்தில் நடக்கும் கவுரவக் கொலைகள் குறித்தும் விளக்கம் கேட்க வேண்டும். இக்கொலைகள் தொடர்பாக சட்டம் இயற்றப்படும் என, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. காலம் தாழ்த்தாமல் உடனடியாக இச்சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தினால் மட்டுமே, கவுரவக் கொலைகளை தடுக்க முடியும் என்றார்.

இவர்கள் எல்லாம் மனிதர்கள் அல்ல. சாதி வெறி மற்றும் பணம் அந்தஸ்து என்ற பேய் பிடித்த அரக்கர்கள்.. இதற்க்கு கொலைதான் முடிவு என்றால் அது மனித தன்மை அற்ற செயல். இதனை யாரும் மன்னிக்க கூடாது. இதற்க்கு ஒரு முடிவு உடனடியாக எடுக்கப்படவேண்டும்...

Thursday, November 4, 2010

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்


                                     அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்



Friday, October 29, 2010

கொலையாளியும் நீதிமன்றமும்

               சுஷ்மா திவாரி என்னும் 25 வயதுப் பெண்ணின் கதை அது.


அவள் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிராமண சாதிப்பெண்.மும்பையில் அவள் குடும்பம் வசிக்கிறது.அவள் கேரளத்தின் கீழ்ச்சாதியான ஈழவ சமூகத்தைச் சேர்ந்த பிரபு என்கிற இளைஞனைக் காதலித்து ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் செய்து கொண்டாள்.
ஆத்திரமடைந்த சாதி அவளுடைய அண்ணன் திலிப் திவாரியின் ரூபத்தில் தடியெடுத்து நின்றது.தங்கையின் செயலால் ஆத்திரமடைந்த திலிப் சுஷ்மாவின் வீட்டுக்குச் செல்கிறான்.அங்கே அவள் இல்லை.கர்ப்பிணியான அவள் அப்போது வெளியே போயிருந்தாள்.
அவளுடைய அன்புக்கணவன் பிரபு,பிரபுவின் அப்பா மற்றும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்களை அந்த இடத்திலேயே கொன்றுபோட்டுவிட்டு திலிப் வெளியேறினான் தன் கொலையாளிச் சகாக்களுடன்.


வெளியே போனதால் சுஷ்மா தப்பினாள்.அவள் அண்ணனை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்திப்போராடி மும்பை கோர்ட்டிலும் பின்னர் மராட்டிய உயர்நீதிமன்றத்திலும் போராடி அண்ணனுக்குத் தூக்குத் தண்டனை பெற்றுத்தருகிறாள்.


அவன் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகிறான்.சுப்ரீம் கோர்ட் தூக்குத் தண்டனை தேவையில்லை 25 ஆண்டு சிரை மட்டும் போதும் என்று கீழ்க்கண்டவாறு தீர்ப்பளிக்கிறது:


The Supreme Court, explaining its decision to revoke the death sentence, said: “It is a common experience that when the younger sister commits something unusual and in this case it was an inter-caste, intercommunity marriage out of [a] secret love affair, then in society it is the elder brother who justifiably or otherwise is held responsible for not stopping such [an] affair.”
It added: “If he became the victim of his wrong but genuine caste considerations, it would not justify the death sentence... The vicious grip of the caste, community, religion, though totally unjustified, is a stark reality “


சாதிய சமூகத்தில் பாவம் அண்ணன்காரன் என்ன செய்வான்.ஆத்திரப்படத்தானே வேண்டியிருக்கிறது என்கிர தொனியிலான இத்தீர்ப்பு சாதி மீறிய காதலுக்கு எதிரான தீர்ப்பாக அமைந்துவிட்டது.சுஷ்மா மனம் தளர்ந்துவிடவில்லை.இன்னும் போராடிக்கொண்டிருக்கிறாள்.இது 1989ஆம் ஆண்டின் வன்கொடுமைத்தடுப்புச் சட்டத்துக்கே விரோதமான தீர்ப்பாகும். சமீபத்தில் பெங்களூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம் நடத்திய இளம்பெண்கள் மாநாட்டில் பங்கேற்றுபேசிய அவர் நான் எனக்காகவும் என் 5 வயது மகள் த்ரிஷ்னாவுக்காகவும் மட்டும் போராடவில்லை.வரும் வரும் தலைமுறைக்காகப் போராடுகிறேன் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.அவர் வெற்றி பெற வேண்டும்.
கம்பத்து கட்டப் பஞ்சாயத்துத்தான் டெல்லியிலும் எதிரொலிக்கிறது. சட்டம் படித்துத்தான் நீதிபதிகளெல்லாம் கோர்ட்டுக்கு வருகிறார்களா?என்கிர கேள்வி நமக்கு எழுகிறது.இது உச்சநீதிமன்றம் அல்ல.உச்சிக்குடுமி நீதிமன்றம் என்று அன்று தந்தை பெரியார் சொன்னது 2010 லாவது பொய்யாக வேண்டாமா?
கண்களில் நீர்கசிந்தாலும் மனதை இறுக்கிக் கொண்டு போராடும் நம் அன்புமகள் சுஷ்மாவுடன் நம் எல்லோருடைய மனமும் துணை நிற்கிறது.


இந்துப் பத்திரிகை
மார்ச்

Monday, October 25, 2010

கல்வி குறித்து பெரியார்

பகுத்தறிவும், உடல் சக்தியும், உலக ஞானத் திறமையும், நல்ல பரம்பரையும், இயற்கை நற்குணமும் முக்கிய பரீட்சையாக இருக்க வேண்டும். அந்த பரீட்சையும், உத்தியோகம் கொடுக்கப்படும் காலத்தில் தான் பரீட்சிக்கப்பட வேண்டுமே ஒழிய, பள்ளிக் கூடத்தில் ஒவ்வொரு வருஷமும் பரீச்சை என்பது தேவையில்லாததாகும்.

எந்த உத்தியோகத்துக்கும் அதற்குத் தேவையான அளவுதான் தகுதி வைக்க வேண்டும்.

பள்ளிப்படிப்பில், ஒரு மாணவன் வகுப்பில், இத்தனை நாள் கிரமப்படி ஆஜராகி விஷயங்களைச் சரிவரக் கவனித்துக் கொண்டிருந்த காலம் தீர்ந்தால் போதும் என்று மேல் வகுப்புக்கு அனுப்பப்பட வேண்டும். பரீச்சை மூலம் மக்களைப் பள்ளியில் மேல் வகுப்புக்குச் செலவிடாமல் கழிக்கக்கூடாது, நிறுத்தக்கூடாது.

பொதுப் படிப்புக்கு ஆக ஒரு பையன் 15-வருடம் அதாவது வருடத்திற்கு ஒரு வகுப்புத் தேறினாலும் பி.ஏ. முடிக்க 15-வருடம் படிக்க வேண்டும் என்றால், இது மிகவும் அநீதியான காரியமாகும். ஏனெனில் ஆறாம் வயதில் பையன் படிக்கத் தொடங்கினால் பி.ஏ.க்கு 21-வருடம் ஆகிவிடுகிறது. அப்பறம் தொழில் படிப்புப் படிக்க 3, 4, 5-வருடங்கள் தேவைப்படுகிறது. பிறகு அவன் அதில் அனுபவம் பெற்றவனாவதற்கு 4, 5-வருடமாகும். இவற்றால் பையனின் நல்ல மூர்க்கதண்யமான ஆயுட்காலம் வீணாகப் போகிறதல்லாமல் பெற்றோர்களுக்கும் எவ்வளவு பணம், எவ்வளவு நாளைச் செலவிட வேண்டி இருக்கிறது. எத்தனை காலத்தை மாணவ வாழ்க்கையில் கழிப்பது? காலம், பணம் செலவழித்தவனுக்கெல்லாம் உத்தியோகம் கிடைக்கின்றதா?

18-வது வயதில் ஒரு பையனைக் கல்யாணம் செய்து கொள்ள அனுமதிக்கிறோம். சட்டமும் அனுமதிக்கிறது. அவன் படிப்பு முடிந்து வேலைக்குத் தயாராக மாத்திரம் 22-வயது 25-வயது ஆகவேண்டுமா? தொட்டில் ஒரு கையிலும், புத்தகம் ஒரு கையிலும் பிடித்துக் கொண்டும் மனைவியை ஒரு கண்ணில் பார்த்துக் கொண்டுமா படிப்பது? இளங் குழந்தைகளையும், மனைவியையும் கொஞ்ச நேரமெங்கே? இப்படிப்பட்ட இந்தப்படிப்புச் செல்வவான்களுக்கும், செல்வமில்லா விட்டாலும் படிக்க வசதியும், வாய்ப்பும் உள்ள பிறவியினால் பிறவிச் செல்வர்களான பார்ப்பனர்களுக்கும்தான். அதாவது மொத்த ஜனத்தொகையில் 100-க்கு 5, 6-பேர்களுக்குத்தான் ஏகபோக உரிமை உள்ளதாக இருக்கிறதே தவிர ஏழை மக்களுக்கும், புத்தி, சக்தி, திறமை, உலக ஞானம், நற்குணம், நற்செய்கை, நல்ல குண பரம்பரை உள்ள மக்களுக்கும் படிக்க வாய்ப்பில்லாமலே போய்விடுகிறது. ஆகவே, இது வருணாச்சிரம தர்ம முறைக்கேற்றபடி ஏற்படுத்தப்பட்ட படிப்பு முறையாகவே இருக்கிறது. வர்ணாசிரமம் கூடாது என்கின்ற போது வர்ணாசிரமப் படிப்பு முறையும் ஒழித்தாக வேண்டாமா?

ஆதலால் ஒரு அளவுக் கல்வி வரை பொதுக் கல்வியாக எல்லாச் சமுதாய மக்களும் படிக்கும் வயதை வந்த 100-க்கு 100-பேரும் படிக்கும்படியாகக் செய்து விட்டு, உத்தியோகத்திற்கும், தொழிலுக்கும் அவசியமான அளவு கல்வியை மாத்திரம் ஜாதி வகுப்புப் பிரிவு மக்கள் எண்ணிக்கைகள் படி கொடுத்து வரலாம். சர்க்கார் நடப்புக்கு அல்லாமல், அதற்கு வேண்டிய மக்கள் எண்ணிக்கைக்கு அல்லாமல் மேல் படிப்பு என்பதற்கு மக்கள் வரிப்பணத்தில் ஒரு காசும் செலவு செய்யாமல் இருக்க வேண்டும்.

கல்விக்குச் செலவு செய்யப்படும் காசு அவ்வளவும், மக்களை எழுதப்படிக்கக் கணக்குப் போடத் தெரியுமளவுக்கு மாத்திரம் செலவு செய்ய வேண்டும்.

ஆங்கிலம் தேவை இல்லை என்று ஆன பிறகு, தமிழ்நாட்டுக்குச் சமஸ்கிருதம் தேவை இல்லை, இந்தி தேவையில்லை என்று ஏன் செய்யக் கூடாது? அப்படி ஏற்பாடு செய்து விட்டால் படிப்பின் தொல்லை பெரும் அளவுக்கு நீங்கிவிடும். அதற்கு ஆகும் காலமும் செலவும் பெரும் அளவுக்கு நீக்கி விடும். கட்டடம், காலேஜ், ஆப்பரட்டஸ், ஆஸ்ட்டல் என்கின்ற பணம் பிடுங்கிப் பேயாட்டமும் வெகு தூரம் குறைந்து விடும், உருப்போடுவதே பரீட்சை யோக்கியதை யாவதும், 15-வருடம் படிப்புக்காகப் பாழாவதும் தானாகக் குறைந்து விடும்.

100-க்கு 75-உபாத்தியாயர்களைப் பெண் உபாத்தியாயர்களாகவே இருக்கச் இருக்கச் செய்யலாம். அல்லது கணவன் மனைவி இருவரையும் ஜோடி உபாத்தியாயர்களாக ஆக்கிச் செலவைச் சிக்கனமாக்கலாம். ஆண் உபாத்தியாயர் மனைவியைக் காப்பாற்ற வேண்டும். பெண் உபாத்தியாயர் புருஷனைக் காப்பாற்ற வேண்டும். அவர்கள் வாழ்க்கைக்கும் மாதம் 100, 200, 300, 500, 1000- வீதம் சம்பளம் தேவைப்படும். ஜோடி உபாத்தியாயர் ஆனால் செலவு சுருக்கலாம்.

ஓலைச் சாலைக் கொட்டகைகள் கல்வி கற்றுக் கொள்ளப் பாமர மக்களுக்குப் போதுமானதாகும்.



"நமது நாட்டில் கல்வி கற்ற மக்கள் எல்லோரையும் அறிவுடையவர்கள் என்று சொல்ல முடியவில்லை; கல்வி வேறு, அறிவு வேறாகவே இருக்கின்றன. கற்றவர்கள் பெரும்பாலும், மூடநம்பிக்கைக்கு உறைவிடமாக விளங்குகின்றனர்; புத்தகப் பூச்சிகளாக வாழ்கின்றனர். பகுத்தறிவுக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை; தானே ஒரு காரியத்தைப்பற்றி ஆராய்ந்து முடிவுக்கு வரும் ஆற்றல் இல்லை; மனித சமூக ஒற்றுமைக்கு எதிராகவுள்ளவைகளில் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். சாதிப்பற்று, சமயப்பற்று, சடங்குகளில் நம்பிக்கை, புராணங்களில் நம்பிக்கை ஆகியவைகள் கற்றவர்களிடம் மலிந்திருக்கின்றன. அவர்கள் சமூகச் சீர்திருத்தவாதிகளின் இயக்கங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறவர்களாகவே இருக்கின்றனர்."

மாப்லியை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

பிரெஞ்ச் சிந்தனையாளர் ´ருசோ´ (Rousseau) தன் சிந்தனைகளை வெளிப்படுத்தும் போதெல்லாம் எதிர்வாதம் அதிகமாக வைக்கும் மாற்றுக் கருத்தாளர் ´மாப்லி´ (Mably, 1709 - 1785)

மனிதன் என்பவன் சுதந்திரப் பிறவி. ஆனால் இன்று எங்கு பார்த்தாலும் விலங்குகளால் பிணைக்கப்பட்டிருப்பதையே காண்கிறோம்" என்கின்ற ருசோவின் தத்துவத்தை பல சிந்தனையாளர்கள் சிறந்த தத்துவமாக தூக்கி பிடிக்கும் போது மாப்லி (ப்ரெஞ்ச் சிந்தனையாளர்) எதிர்வாதம் வேறு கோணத்திற்கு எடுத்துக்காட்டியது. 

´சமத்துவம்´ என்பது நியாயமான கோரிக்கைதான். ஆனால் மனிதனுக்கு மனிதன் புத்திக்கூர்மை, ஊக்கம், செயல்திறன், பகுப்பாய்வு போன்ற சமாச்சாரங்கள் எல்லோருக்குள்ளும் சமமாகவா இருக்கின்றது என்பதன் அடிப்படையில் மாப்லியின் தத்துவ விளக்கம் செல்கிறது.... 

"இயற்கை மனிதர்கள் அனைவரையும் எல்லாவிதங்களிலும் சமத்துவத்துடனே படைத்திருக்கிறது சிலதை தவீர. பின்னாலில் மனிதர்களுக்குள் முரண்பாடுகளும், வேற்றுமைகளும் உருவாக கல்வி காரணங்களாகின. 

எல்லோருக்கும் கல்வியும், பயிற்சியும் சமமாக பகிர்ந்தளிக்கப்படவில்லை. கல்வி கிடைக்காத மனிதர்களை தாழ்ந்த நிலைக்கு சமூகம் வைத்திருக்கிறது. அதன் தாக்கம் அம்மனிதர்களுக்குள் தாழ்வுமனப்பான்மையை ஏற்படுகிறது. பொருளாதாரத்திலும் பின்தங்கி இருக்க வேண்டிய சார்புநிலையை சமூகம் ஏற்படுத்தி விடுகிறது. 

தகுதிக்கு ஏற்ற கல்வி வாய்ப்புகளில் சக மனிதர்கள் தரம் பிரிக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள். 

பொதுவாகவே, மனிதர்கள் கௌரவம், புகழ் அங்கீகாரத்துக்கு ஆசைப்படுபவர்கள். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் பொழுதெல்லாம் மனிதர்கள் அதை உபயோகித்துக் கொள்ளவே விரும்புவார்கள். 
ஆனால், கல்வித் தகுதியின் பேரால் எல்லா வாய்ப்புகளுமே முற்றாக மறுக்கப்படும் மனிதர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் அதிருப்தியை எப்படி வெளிப்படுத்துவார்கள்? அவர்களுக்கு உரிமைகளும், சலுகைகளும், அங்கீகாரங்களும் சமுகத்தில் கிடைக்காத போது மிருகநிலைக்குத்தானே செல்வான்? 

சக மனிதர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? 

எல்லா மனிதர்களுக்கும் கல்வி வாய்ப்பு அளித்திருக்கிறார்களா? எல்லா மனிதர்களும் தங்களுக்குள் வேற்றுமையை ஏற்படுத்தி மிகைப்படுத்தி காட்டுவதைத்தானே விரும்புகிறார்கள்?" 

ஆகவே, ருசோ சொல்வதுபோல் சுதந்திர மனிதன் இன்று சுதந்திர மனிதனாக இல்லாமல் போனதற்கு முதற்காரணம் இந்த பாழாய் போன கல்வி அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படாததால்தான் ஏகப்பட்ட சங்கதிக்களுக்குள் மாட்டிக் கொண்டு தவிக்கின்றான் என்று மாப்லி சொல்கிறார். 

நியாயம் தானே?

Sunday, October 24, 2010

கவிதை 1



      ¸¡¾ø 


±ý ¸ñ¸û ¯ý¨Éì

¸¡¾Ä¢ôÀ¾üÌÓý

±ý ¦¿ïºõ

§¿º¢òÐÅ¢ð¼Ð...


À¡÷¨Å¸û

§ÀÍžüÌ Óý ¿ÁÐ

¯ûÇí¸û §Àº¢Å¢ð¼É...


¯ý¨É ¦ÅýÈ ±ý¨ÉÔõ

±ý¨É ¦ÅýÈ

¯ý¨ÉÔõ ²§É¡ þó¾

¯Ä¸õ ÅçÅü¸Å¢ø¨Ä...


¯Ä¸õ Å¢ÕõÀ¡¾

±ý ¸¡¾¨Ä

þÆì¸×õ þø¨Ä...


þÈìÌõ ŨâÖõ

¯ñ¨Á¡ö §¿º¢ô§Àý

±ýÈ ¯Ú¾¢Ô¼ý

¯ý கை பிடிப்பேன்....

¿ÄÓ¼ý Å¡Æ ¨Åô§Àý.....

முதல்வர் கருணாநிதி வருத்தம்

வரி வடிவங்களாகவே உள்ள கலப்பு திருமணங்கள் : முதல்வர் கருணாநிதி வருத்தம்
                                                
""இன்னும் நம் நாட்டில் காதல் திருமணம், கலப்புத் திருமணம் என்பதெல்லாம், வெறும் வரிவடிவங்களாக உள்ளன. அதை விடுத்து, உண்மையிலேயே காதல் திருமணம், கலப்புத் திருமணம் நமது சமுதாயத்தில் நடக்க வேண்டும்,'' என்று முதல்வர் கருணாநிதி வலியுறுத்தினார்.கார்த்திகேயன், ரேவதி ஆகியோரது திருமணத்தை நடத்தி வைத்து, முதல்வர் கருணாநிதி பேசியதாவது: மணமக்கள் பற்றி ஸ்டாலின் பேசும் போது, "ஸ்டுப்பிட்' என்பதில் தான் இந்த காதல் ஆரம்பமானதாக சொன்னார். பொதுவாக, காதலிப்பதே முட்டாள்தனம் என்ற ஒரு தத்துவம் நாட்டில் இருக்கிறது. ஆனால், அது முட்டாள்தனம் அல்ல. முழுமையான அறிவின் எல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், மணமக்கள் தங்களது வாழ்க்கையை நடத்துவர். இது கலப்புத் திருமணம் என்றனர். அந்தக் கலப்புத் திருமணத்தை இங்கு பாராட்டிப் பேசிய எத்தனை பேர் செய்து கொண்டனர் என்பதை தங்கள் நெஞ்சில் கை வைத்துப் பார்க்க வேண்டும். ஏனென்றால், கலப்புத் திருமணத்தைப் பற்றி வானளாவப் பேசுகிறவர்கள், தங்கள் ஜாதியில், சொந்தத்தில் பெண் கிடைக்கிறதா, சொந்தத்தில் மணமகன் கிடைக்கிறானா என்று தான் கணக்கிடும் காலமாக இந்தக் காலம் இருக்கிறது.


இன்னும் நம் நாட்டில் காதல் திருமணம், கலப்புத் திருமணம் என்பதெல்லாம் வெறும் வரிவடிவங்களாக, வார்த்தை ஜாலங்களாக இருக்கின்றன. அதை விடுத்து உண்மையிலேயே காதல் திருமணம், கலப்புத் திருமணம் நமது நாட்டில், சமுதாயத்தில் நடக்க வேண்டும். இன்றைக்குச் சமத்துவபுரங்களை உருவாக்கியிருக்கிறோம் என்றால், அது ஏதோ ஏழைகளுக்கு வீட்டு வசதி செய்து தருகிறோம் என்றல்ல. அந்தச் சமத்துவபுரங்களிலே தான், கலப்புத் திருமணமே இன்று உருவாகிறது. சமத்துவபுரங்களில் உருவாகிற காதல், கலப்புத் திருமணங்களாக மாறி, அவர்கள் மூலம் இந்த நாட்டுக்கு கிடைக்கும் புதல்வர் கள் அல்லது புதல்விகள், எதிர்காலத்தில் இந்த தமிழகத்தை சமத்துவ பாதையில் நடத்திச் செல்லக் கூடிய வகையில் வளரக் கூடும் என்ற எண்ணத்தில் தான் சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் பேசினார்.
                       


                                                                                                                            தினமலர்
                                                                ஜனவரி 19,2010,

Friday, October 22, 2010

ஜாதியை ஒழிக்கவே முடியாதா?






ஜாதியை ஒழிக்கவே முடியாதா? ஜாதிகளே இல்லாத சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியாதா?

 ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று என் தாத்தாவின் அப்பா காலத்திலிருந்து பேசப்படுகிறது. இதை ஒரு உதாரணத்திற்கு தான் சொல்கிறேன். உண்மையில் இந்த கருந்து புத்தர் காலத்திலிருந்து ஆரம்பித்துவிட்டது. ஆனால் இன்று வரை ஜாதி ஒழிந்த பாடில்லை. இந்திய புராணம் ஒன்றில் ரத்த பிஜ அரக்கன் என்று ஒருவன் காட்டப்படுகிறான் அவனை வெட்டினால் அவனது உடலிருந்து வருகின்ற ஒவ்வொரு துளி ரத்தமும் அவனை போலவே பல அரக்கர்களை உருவாக்குமாம். ஏறக்குறைய ஜாதியும் அப்படி தான் இருக்கிறது. ஒரு பக்கம் அதை துரத்தினால் இன்னொரு பக்கம் பிரம்மாண்டமாக உருவெடுத்து வருகிறது. உண்மையில் ஜாதியை ஒழிக்கவே முடியாதா? ஜாதிகளே இல்லாத சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியாதா? என்று தணியும் ஜாதி என்ற நெருப்பு.

   நமது அரசியல்வாதிகளிடம் சென்று இந்த கேள்விகளை கேட்டால் பன்நெடுங்காலமாக இதற்கு தானே பாடுபட்டு கொண்டிருக்கிறோம். எப்படியும் வெற்றி பெற்று விடலாம், நம்பிக்கையோடு காத்திருங்கள் என்று பல நூறு வருஷமாக கூறி வருகின்றனர். பொருளாதார மேதைகளிடம் சென்று இந்த கேள்வியை வைக்கும் பட்சத்தில் ஒவ்வொரு தனி மனிதனின் வருவாயும் அதிகரிக்கும் போது தானாகவே ஜாதி என்ற நெருப்பு அனைந்து விடும் என்கிறார்கள். பணத்தாலும் படிப்பாலும் உயர்ந்து விட்ட பிறகும் பெருவாரியான மனிதர்கள் ஜாதி பற்றுதலை விடவில்லையே என்று அவர்களிடம் திருப்பி கேட்டால் நீண்ட மௌனத்தை தான் பதிலாக தருகிறார்கள். வேதாந்தம் பேசுகின்றனர்,
   
ஜாதி ஒழிந்து விட்டால் பல பேருடைய பிழைப்பு நடக்காது பதவியில் உட்கார்ந்து கொண்டு ஆனந்த பூங்காற்றை அனுபவிக்க முடியாது. அதனால் ஒரு கையில் துப்பாக்கியும் இன்னொரு கையில் அமைதி புறாவும் வைத்திருக்கும் சந்தர்ப்பவாத சர்வதிகாரிகள் போல் ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று மேடை போட்டு பேசிக் கொண்டே ஜாதி ஊர்வலங்களுக்கு பட்டுகம்பளம் விரிக்கிறார்கள். என் இனத்தார்க்காக பாடுபடுவதே நான் பிறவி எடுத்ததன் நோக்கமென்று நெஞ்சை நிமிர்த்தி அறைகூவல் விடுவது கூட வெட்கமாக படவில்லை, வெற்றி முரசாகப்படுகிறது.
    
பண்டையகால சமூக வரலாற்றை உன்னிப்பாக கவனிக்கும் போது இந்த கருத்து சரியாக தான் இருக்குமோ என்ற ஒரு எண்ணம் ஏற்படுகிறது, ஆனால் கீழ் ஜாதி பெண்கள் மாராப்பு அணிய கூடாது, மேல்ஜாதிகாரர்களிடம் பேச நேரிட்டால் 25 அடி தூரமாவது தள்ளி நின்று பேச வேண்டும். ஊர் பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க கூடாது, பொது பாதையில் நடக்ககூடாது செருப்பு அணிய கூடாது, தோளில் துண்டு போடகூடாது கொட்டாங் குச்சியில் தான் தேநீர் அருந்த வேண்டும் என்றெல்லாம் ஆயிரமாயிரம் மனித தன்மையற்ற கொடுமைகள் ஜாதியின் பெயரால் நடைபெறும் போது நல்ல மனிதர்களின் அடிவயிறு பற்றிஎரிகிறது , எப்பாடுபட்டாவது ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று உடம்பும் மனதும் துடிதுடிக்கின்றது.
  
மேல்ஜாதிகாரர்களின் கொடுமையை கண்டு கீழ் ஜாதிகாரர்கள் பொங்கி எழும் போது ஆராவாரம் செய்து வரவேற்க தோன்றும் அதே நேரத்தில் தற்கால ஜாதிபோராட்டங்கள் நமது வயிற்றில் புளியை கரைக்கிறது. அரசு வேலை வாய்ப்பில் எங்கள் ஜாதிக்கு இத்தனை சதவிகிதத்தை  ஒதுக்கிட வேண்டுமென்று கோரிக்கை கூட நியாமானது தான். ஆனால் அந்த லட்சியத்தை அடைய அவர்கள் கடைபிடிக்கும் நடைமுறைகள் நாகரிக சமூகத்திற்கு ஏற்றதாக இல்லை. அந்தந்த ஜாதிகாரர்களே வெட்கி தலை குனியும் வண்ணம் பல நேரங்களில் அவர்களின் செயல்கள் அமைந்து விடுகிறது. கடைகளை சூறையாடுவதும், பேருந்துகளை தீ வைத்து கொளூத்துவதும், கட்டிடங்களை சேதப்படுத்துவதும் பொதுமக்களை ஒட ஒட அடித்து விரட்டுவதும் வார்த்தைகளால் எழுத முடியாத அபாச சொற்களை பயன்படுத்துவதும் கண்டு நமது நெஞ்சு பொறுக்கவில்லை.

     இன்று ஜாதிக்கொரு தலைவர்கள் இருக்கிறார்கள். அப்பாவி தொண்டர்களை தூண்டி விட்டு விலை மதிக்க முடியாத மரங்களை சாலை நடுவில் வெட்டி வீழ்த்தி, பொது ஜனங்களுக்கு இடையில்   கலகத்தை உருவாக்கி, உயிர் , சேதங்களை ஏற்படுத்தி, கட்சியை வளர்த்து அரசு பதவிகளை பிடித்து கோடிக்கணக்கான ரூபாயை சம்பாதித்து தங்களது தோட்ட மாளிகைகளை பளிங்குகளால் மெழுகி, ஜாதிகாரர்களுக்கு கொடுக்க வேண்டிய அமைச்சர் பதவிகளை தங்களது சொந்த பந்தங்களுக்கு மட்டுமே கொடுத்து ஏற்றி விட்ட ஜாதிமக்களை எட்டி உதைத்து யார் அதிகம் இடம் தருகிறார்களோ அந்த கட்சிகளோடு கொள்கை கோட்பாடுகளை பற்றி கவலையில்லாமல் கூட்டணி வைத்து தங்களது வாழ்க்கையை வளப்படுத்தி கொள்ளும் தலைவர்கள் ஒரு பக்கம்
    
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக உழைப்பேன் என்று களமிறங்கி தலைமை பதவியை தக்க வைத்து கொள்ள படாதபாடுபட்டு தன் ஜாதிகாரர்களையும் கைவிட்டு தன்னையும் நிலை நிறுத்தி கொள்ளாமல் பரிதவித்து நிற்கம் தலைவர்கள் இன்னொரு பக்கம், இந்த தலைவர்கள் பாழ்பட்டு கிடக்கும் தங்கள் சமூகம் வாழ்விப்பதற்காக எதையாவது செய்யமாட்டார்களா என்று ஏங்கி எதிர்பார்த்து கோஷம் போட்டு கூடிய இளைஞர் கூட்டம் திசை தெரியாது தவிப்பது வேறொரு பக்கம்.
    
ஜாதிக்காக உழைக்கிறேன் என்று கிளம்பி விட்ட இந்த தலைவர்களால் அழிக்கப்பட வேண்டிய ஜாதி மரம் தழைத்து ஒங்கி வளர்கிறது, எந்த வித ஒளிவும் மறைவும் இல்லாமல் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டு மென்றால் முப்பது வருடங்களுக்கு முன்பு எல்லாம் ஆதிதிராவிட மக்களுக்கும், வன்னியர் இன மக்களுக்கும் எந்த பகைமையும் இருந்தது கிடையாது. தெற்கு பகுதியில் தேவேந்திர குலவேளாளர் மக்களுக்கும் மற்ற ஜாதிகாரர்களுக்கும் பெரியளவில் சண்டை சச்சரவுகள் கிடையாது, என்று ராமதாஸ் , கிருஷ்ணசாமி, திருமாவளவன் போன்ற தலைவர்கள் உருவானர்களோஅன்று பிடித்தது சமூக அமைதிக்கு சனி, இந்த தலைவர்களின் வருகையால் அப்பாவி மக்கள் எந்த பயனையும் அடைந்தது இல்லை, மாறாக இந்த தலைவர்களின் செல்வாக்கும், செல்வவளமும் தான் அதிகரித்து இருக்கிறது.

    முன்று தலைவர்களின் பெயர்களை மட்டும் நான் குறிப்பிட்டதனால் ஜாதிவெறியை வளர்ப்பது அவர்கள் மூவரும் தான் என யாரும் தவறுதலாக நினைக்க வேண்டாம், இன்று இந்தியாவில் இருக்கின்ற அரசியல்கட்சி தலைவர்கள் அனைவருமே ஜாதி பாகுபாட்டை மறைமுகமாகவோ நேர்முகமாகவோ வளர்த்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். பொதுவுடமை பேசும் கம்னியூஸ்ட் கட்சியாக இருக்கட்டும்;, தேசியம் பேசும் காங்கிரஸ் மற்றும் பா.ஜா.க கட்சிகளாக இருக்கட்டும் பிராந்திய பிரச்சனைகளை முன்னிறுத்தும் மாநில கட்சிகளாக இருக்கட்டும் எல்லோருமே தேர்தல் இல்லாத காலங்களில் ஜாதி சமத்துவம் பேசியும், தேர்தல் காலங்களில் ஜாதியின் வலுவை பேசியுமே வருகிறார்கள். ஒரு தொகுதியில் உண்மையான கட்சி தொண்டர்கள் யார் என்று பார்த்து தேர்தலில் நிறுத்துவதை விட தொகுதியில் எந்த ஜாதிவலு அந்த ஜாதிக்காரனை வேட்பாளாராக அறிவிப்பது தான் நடைமுறை அரசியலாக இருக்கிறது, தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குகளை சேகரிக்க பணம் கொடுக்கப்படுகிறது, மது கொடுக்கப்படுகிறது என்பதை விட நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்ந ஜாதிகாரர்களுக்கு சலுகைகள் வழங்குவோம், இன்ன ஜாதிகாரர்களை அரசியல் ரீதியாக ஒரம் கட்டுவோம் என்ற வகையில் விஷமம் வளர்க்கப்படுகிறது.

இந்து மதத்தில் மட்டும் தான் ஜாதி பிரிவுகள் இருக்கிறது என்பதும் அறியாமையான கருத்தாகும். மனிதர்கள் எல்லோரும் சகோதர்களே என்று போதித்த முகமது நபி அவர்கள் உருவாக்கிய இஸ்லாம் மதத்தில் கூட ஷியா, சன்னி என்ற ஜாதிபிரிவுகள் உள்ளன. இந்தியாவின் தென்பகுதி முஸ்லிம் இடத்தில் பட்டானி, ராவுத்தர் மரக்கியார், லப்பை, மாப்பிள்ளை, என ஜாதிபிவுகள் இருப்பதை யாரும் மறுக்க முடியாது, கிறிஸ்த்துவ மதம் கூட உலக அளவிலும் சரி , இந்திய அளவிலும் சரி, பல ஜாதி வகைகளை தனக்குள் அடக்கமாகவே கொண்டுள்ளது கிறிஸ்த்துவ ஜாதி போராட்டத்திற்கு பலசம்பவங்களை உதாரணமாக சொல்லலாம் என்றாலும் தென்னிந்திய திருசபையின் தலைமை பொறுப்புகளுக்கு எந்த தலித் கிறிஸ்த்துவர்களும் சுலபமாக வந்து விட முடியாது, ரெட்டியார் மற்றும் நாடார் ஜாதி கிறிஸ்த்துவர்களின் ஆதிக்கம் அங்கு ஏராளம்.

   ஆக நமது நாட்டில் எல்லோரும் போட்டி போட்டு கொண்டு ஜாதி வெறியை வளர்த்து கொண்டிருக்கிறார்கள்,   எல்லாம் சரி, ஜாதியை ஒழிக்க என்ன தான் வழி என்று மண்டையை போட்டு உடைக்கிறீர்களா? அதெல்லாம் தேவையற்றது, ஜாதியை ஒழிப்பது ஒன்றும் ஆகாயத்தை வில்லாக வளைப்பது, மணலை கயிராக திரிப்பது போன்று நடைபெறாத விஷயம் இல்லை, ஆட்சியாளர்கள் மனது வைத்தால் இரண்டு மணி நேரத்தில் ஜாதியை ஒழித்து விடலாம், ஜாதியாக இருக்கட்டும் அல்லது மற்ற சமூக கேடுகளாகட்டும் எல்லாமே பொருளாதார நலத்தை அடிப்படையாக கொண்டு உருவானது தான் எனவே சொந்த ஜாதிகளுக்குள் திருமணம் செய்து கொண்டால் சொத்துரிமை இல்லை , கலப்புத்திருமணம் செய்து கொண்டால் தான் அரசு வேலை, மற்றும் தலைவர், கவுண்சிலர்  MLA , MP ஆகிய பதவிகளில் போட்டியிடுபவர்கள் கட்டாயம் கலப்புத்திருமணம் கொண்டவர்க்களுக்குத்தான் இடம் என்று சொல்லுங்கள் ஜாதி நாலடைவில் தானாக ஒழியும். கலப்புத்திருமணம் செய்து கொண்டால் தான் எந்த ஜாதியும் பார்காமல் நடுனிலையாக செயல்பட முடியும் .
என்று சிறியதாக ஒரு சட்டதிருத்தம் கொண்டு வந்தாலே ஜாதி பஞ்சாக பறந்துவிடும். இதை செய்ய போவது யார்?