சங்க
கால தமிழகத்தின், திராவிடர்களின் பண்பாடு காதல் திருமணமே. இதை நம் அக
நானூற்றுப் பாடல்களும், சங்க கால இலக்கியங்களும் தெளிவாக
புலப்படுத்துகின்றன. அப்படியானால், ஏன் இப்போது காதல் திருமணம் என்பதை ஒரு
குற்றம் போல் பார்க்கிறார்கள்? ஏன் தமிழ் பண்பாட்டின் சீர்குலைவாக
எண்ணுகிறார்கள்? எனக்கென்னவோ இது ஆரியர்கள் திராவிடர்களை கட்டுப்படுத்த
அறிமுக படுத்திய ஒரு வழியாகவே தெரிகிறது. (இதை அறுதியிட்டு சொல்ல என்னிடம் துல்லியமான வரலாற்று குறிப்புகள் ஏதுமில்லை, யாருக்காவது தெரிந்தால் இங்கு பின்னூட்டம் இடவும்) என் கருத்துக்கான காரணங்களை பட்டியலிடுகிறேன்.
ஒரு காலத்தில் ஆரியர்கள் திராவிடர்கள் மீதும், திராவிடர்கள் ஆரியர்கள் மீதும் காதல் கொண்டு திருமணங்கள் புரிய, ஆரியர்கள் தங்கள் அடையாளத்தை இழப்பதாக கருதி, தொழில் அடிப்படையில் வருணாசிரம தர்மத்தை கடவுளே தந்ததாகக் கூறி திராவிடர்களை கீழ் சாதி ஆக்கினர். அதற்கு முன் நில அடிப்படையில் குறிஞ்சி, முல்லை,மருதம், நெய்தல் (ம) பாலை என மட்டுமே வகைப்பட்டு இருந்த திராவிடர்கள், சாதி அடிப்படையில் தங்களை வகைப்படுத்த ஆரம்பித்தார்கள்.
சாதிக்குள்ளேயே திருமணம் செய்வதை கட்டாயமாக்கி தங்களின் அடையாளத்தையும், இனத்தையும் காப்பாற்றிக் கொண்டனர் ஆரியர்கள். ஆரியர்கள் கடவுளின் தலையிலிருந்து உருவாகியவர்கள், அவர்கள் கடவுளுக்கும், மக்களுக்கும் இடையில் உள்ள இறைத் தூதுவர்கள் என நம்பி ஆரியர்களை போலவே நாமும் இருக்க வேண்டும் எனக் கருதி திராவிடர்களும் சாதிக்குள்ளேயே திருமணம் செய்வதை கட்டாயமாக்கி கொண்டனர். இதை சமூகவியலில் 'ஸ்ம்ஸ்கிருதமயமாதல்' எனக் குறிப்பிடுவோம்.
தங்கள் ஆளுமையை, அதிகாரத்தை நிலை நாட்டிக்கொள்ள ஆரியர்கள், திராவிடர்களின் குழந்தை பிறப்பு, பெயர் வைத்தல், இறப்பு, திருமணம் என எல்லா முக்கியத்தருணங்களிலும், பற்பல சடங்குகளை கடவுள் தந்ததாக அறிமுகபடுத்தினார்கள்.
இவ்வாறு பல மூட நம்பிக்கைகளையே திராவிடர்களின் வாழ்க்கையாக ஆக்கிவிட்டு அதன் மூலம் பயனடைந்த ஆரியர்களுக்கு, தலை வலியாய் அமைந்தவர்களில் மிக முக்கியமானவர் ஈ.வே.ரா பெரியார். அவர் தாலி என்பது ஆரிய அதிகாரத்தின் சின்னம் எனக்கூறி சுய மரியாதை திருமணங்களை நடத்தி வைத்தார். மேலும் தீண்டாமை ஒழிப்பு, இட ஒதுக்கீடு போன்ற பல சீர்திருத்தங்களை கொண்டுவந்து ஆரிய அதிகாரத்தை நிலை குலையச்செய்தார்.
மேற்கத்திய கல்வி நம்மை முற்றிலும் மேற்கத்தியமாய் மாற்றிவிட்டது. நாம் பேசும் மொழி, அணியும் உடை, உணவு பழக்கம், கிரிக்கெட், பிறந்த நாள் விருந்து, ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம், ஆங்கில திரைப்படங்கள் என நாம் மேற்கத்தியர்களாகவே மாறி வருகிறோம். அதைத்தான் இச்சமுதாயம் ஊக்குவிக்கிறது.
மேற்கத்திய பண்பாட்டில் காதல் என்பது மிகச்சாதாரணமான ஒன்று. மேற்கத்திய கல்வியை கற்றுக் கொடுத்து ஆங்கில அறிவை மட்டுமே பெற வேண்டும் ஆனால் அதன் பண்பாடு/கலாச்சாரமான காதல் திருமணங்கள் செய்யக்கூடாது எனச் சொல்வது மிகவும் முரண்பாடாய் உள்ளது. பண்டைய திராவிட தமிழ் பண்பாடும், இப்போது நம்மால் பெரிதும் போற்றப்படும் மேற்கத்திய பண்பாடும், காதல் திருமணங்களை ஆதரிக்கும் போது நடுவில் வந்த ஆரிய பண்பாடு நம்மை சாதியை காப்பாற்ற சொல்கிறது அதன் மூலம் தன் அதிகாரத்தை நிலை நிறுத்த முயற்சிக்கிறது.இவ்வுண்மையை அறியாத பலர், ஆரியர்களால் அறிமுகபடுத்தப்பட்ட சாதி முறையை மீற முடியாமல் காதல்/கலப்பு திருமணங்களை எதிர்க்கின்றனர்.
சாதி என்ற ஒன்று இல்லாமல் போக முடியாமல் போனாலும் கூட, அதன் தாக்கத்தை காதல்/கலப்பு திருமணங்கள் குறைக்கும் என்பது உண்மை. பெரியாரும் அதைத்தான் கருதினார்.

"உலகம் மாறிவிட்டது, நாம் மேற்கத்திய மயமாகியுள்ளோம், அதனால் நாம் காதல்/கலப்பு திருமணங்களை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும்" என்று சொன்னால் சிலர் புரிந்து கொள்வார்கள்.
ஆனால் பலரோ அது நமது பண்பாடு/கலாச்சாரம் கிடையாது என சொல்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியது, "நம் உண்மையான கலாச்சாரம் காதல் திருமணங்கள் தான். சாதி என்பது ஆரியர்கள் உருவாக்கியது, அது திராவிடர்களுடையது அன்று. சாதி பாகுபாடின்றி வாழ்க்கை துணையை அமைத்துக்கொள்வதே உண்மையில் தமிழர் பண்பாடு "
உண்மையில் அறிவை ஆதரிப்பவர்கள், இதனை ஏற்றுக்கொள்வார்கள் என நான் உறுதியாய் நம்புகிறேன். அறிவை ஆதரிக்காது, சாதியை காப்பாற்றுவதில் உடும்புப்பிடியாய் இருப்பவர்கள் மேற்கத்திய பண்பாட்டால் விரைவில் பின்னுக்கு தள்ளப்படுவார்கள்.
- நன்பரின் பதில் இருந்து எடுத்தது.

No comments:
Post a Comment